கேளுங்க சொல்கிறோம்
கே.பாஸ்கரன், கரோல்பார்க், டில்லி.*வியாபார வளர்ச்சிக்கு...நேர்மை, உண்மையுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். வெள்ளியன்று காலை 6:00 - 7:00 மணிக்குள் மாரியம்மனை வழிபடுங்கள். ஜி.கிருஷ்ணன், கடையநல்லுார், தென்காசி.*எதிரி தொல்லை மறைய...சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி விளக்கேற்றுங்கள். ம.அபிநயா, எழும்பூர், சென்னை.*விரதநாளில் உணவில் உப்பு சேர்க்கலாமா...கந்தசஷ்டி(6 நாள்), நவராத்திரி(9நாள்) விரதத்தின் போது உப்பின்றி சாப்பிட்டால் கடவுள் அருளால் விருப்பம் நிறைவேறும். எஸ்.வினித், ஹலசூரு, பெங்களூரு.*கிரகதோஷம் விலக...பைரவருக்கு மிளகு, தேங்காய், பூசணிக்காய் தீபமேற்றுங்கள். ப.விஜயா, கன்னிவாடி, திண்டுக்கல். *புத்தாடைகளில் மஞ்சள் வைப்பது ஏன்?இது மங்கலத்தின் அடையாளம், கிருமி நாசினி. சி.முருகன், திருமங்கலம், மதுரை.*தெய்வத்தின் சிலைகளை வீட்டில் வழிபடலாமா?6 அங்குலம் (15 செ.மீ.,) உயர சிலையை வழிபடலாம். தினமும் நைவேத்யம் அவசியம். கே.ராதா, கருங்கல், கன்னியாகுமரி.*திருஷ்டி சுற்றுவது ஏன்நேர்மறை, எதிர்மறை எண்ணம் கண்கள் மூலம் வெளிப்படுகிறது. இதில் எதிர்மறை எண்ணத்தை தடுக்கவே திருஷ்டி சுற்றுகிறோம். பி.கமலம், அவிநாசி, திருப்பூர். *நிலப்பிரச்னை தீர...செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிேஷகம் செய்யுங்கள். பழநி முருகனை தரிசித்தால் நன்மை அதிகரிக்கும். மா.பகவதி, திருநள்ளாறு, புதுச்சேரி. *ஒரே மாதத்தில் இரு அமாவாசை, இரு கார்த்திகை வந்தால் விரதமிருக்க ஏற்றது எது?4 நாளும் விரதமிருப்பது அவசியம்.