கேளுங்க சொல்கிறோம்
எம்.ரகு, உச்சிமேடு, கடலுார்: பசுவின் சாணத்தை வாசலில் தெளிப்பது ஏன்?தெய்வீகம் நிறைந்த அதிகாலையில்(காலை 6:00 மணிக்கு முன்) வாசலைப் புனிதப்படுத்த தெளிக்கிறோம். மு.குமார், காசிதர்மம், தென்காசி: அமைதி இல்லை... என்ன செய்யலாம்? காலையில் நீராடியதும் இஷ்ட தெய்வத்தை தியானித்தபடி 108 போற்றியை சொல்லுங்கள். பி.பகவதி, எழுமலை, மதுரை: மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. என்ன செய்ய?படிப்பின் அவசியத்தை சொல்லுங்கள். புரியும் விதத்தில் பாடத்தை நீங்கள் சொல்லிக் கொடுங்கள். ஆ.சரவணன், கூனம்பட்டி, திருப்பூர்: என் தாயை முதியோர் இல்லத்தில் மனைவி சேர்க்கச் சொல்கிறாள். என்ன செய்வது?பச்சை இலையும் ஒருநாள் பழுப்பாகும். மனைவியை சமாதானப்படுத்துங்கள்.மா.தங்கம், வீரபாண்டி, தேனி: பரசுராமரின் கையில் கோடரி இருப்பது ஏன்?அந்தணர்கள், முனிவர்களை இழிவுபடுத்திய மன்னர்களை அழிப்பதற்காக தவம் செய்து சிவனிடம் வரமாக பெற்றது இது. இதைக் 'கந்தபரசு' என்பர். அ.பவித்ரா, கிள்ளியூர், கன்னியாகுமரி: *பிரதோஷத்தில் தான் நந்தி அபிஷேகம் நடக்குமா?இல்லை. தினமும் நடக்கும். பிரதோஷத்தில் செய்வது சிறப்பு. து.பாஸ்கர், வண்டலுார், காஞ்சிபுரம்: *துன்பம் வருவதும் நன்மைக்குத் தான் என்கிறார்களே...தீயிலிட்ட தங்கம் ஜொலிக்கும். அதுபோல துன்பத்தால் மனம் பக்குவம் ஆகும். தி.புஷ்பா, பசவன்குடி, பெங்களூரு: பிடிக்காத பாடத்தை அப்பா படிக்கச் சொல்கிறார். என்ன செய்ய?உங்களுக்காகத் தான் சொல்கிறார். முடியாவிட்டால் பளிச்சென சொல்லி விடுங்கள். ம.வேணி, கல்யாண்புரி, டில்லி: *விரத நாளில் பசி அதிகமாகிறதே...இது மனப் பிரச்னை. இளநீர் அல்லது மோர் குடிக்கலாம்.