கேளுங்க சொல்கிறோம்
கு.தீபா, அருப்புக்கோட்டை, விருதுநகர்: விளக்கேற்றும் போது எண்ணெய்யா... திரியா... எது முதலில்?விளக்கை சுத்தம் செய்த பின் எண்ணெய்யை ஊற்றுங்கள். அதில் திரியை நனைத்து விளக்கேற்றுங்கள்.தா.அனுஷியா, நாகர்கோவில், கன்னியாகுமரி: அபிஜித் முகூர்த்தம் என்றால்...காலை 11:50 - 12:10 மணி வரை. இந்த நேரத்தில் எதை தொடங்கினாலும் வெற்றி. வெ.ராஜா, கல்யாண்புரி, டில்லி: சிறிய கோயிலில் சங்காபிஷேகம் நடத்தலாமா?எந்த கோயிலிலும் நடத்தலாம். தி.செல்வி, நங்கநல்லுார், சென்னை: *மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்றால்... பெற்றோரே தெய்வம் என்பது இதன் பொருள். சொ.சிவா, வீரவநல்லுார், திருநெல்வேலி: கடலில் நீராடுவோர் பழைய துணிகளை விடுவது சரியா?சரியல்ல. இதனால் கடலை நாம் அசுத்தப்படுத்துகிறோம். ரா.திவ்யபாரதி, சின்னாளபட்டி, திண்டுக்கல்: ஆன்மிக வளர்ச்சிக்கு...தனிமனித ஒழுக்கமும், பக்தியும் சேர்ந்தால் ஆன்மிக வளர்ச்சி ஏற்படும். ம.சீதளாதேவி, ஊட்டி, நீலகிரி: குருட்டு அதிர்ஷ்டம் என்றால்... தகுதியற்ற ஒருவருக்கு பணம், பதவி, புகழ் கிடைப்பது. பா.ஸ்ரீநிதி, மதுரமங்கலம், காஞ்சிபுரம்: விநாயகர் இல்லாத அரசமரத்தை வழிபடலாமா...தெய்வீக சக்தி நிறைந்தது அரசமரம். அதனால் தனியாகவும் வழிபடலாம். கு.கல்யாண், திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சுக்கிர தோஷம் விலக...கோசாலையில் உள்ள பசுக்களுக்கு வெள்ளியன்று அகத்திக்கீரை கொடுத்து மூன்று முறை சுற்றுங்கள்.