கேளுங்க சொல்கிறோம்
யுவஸ்ரீ.ஆர், செவ்வாய்பேட்டை, திருவள்ளூர்: நிரந்தர வேலை கிடைக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?புத்திர்பலம் யசோதைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம்|அஜாட்யம் வாக்படுத்வம் சஹனுாமத் ஸ்மரணாத் பவேத்||இதைச் சொல்லி அனுமனை வழிபடுங்கள். யோகிதா.கே, திப்பசந்திரா, பெங்களூரு: ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டு?ஒருவர் தன் சந்ததிக்கு பெற்றோர் ஆக தேவையான காலம். முன்பு 21. தற்போது 27 ஆண்டு. ஹரிதா.மு, வில்லிவாக்கம், சென்னை: காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்? கையின் நுனியில் லட்சுமி, நடுவில் சரஸ்வதி, மணிக்கட்டில் பார்வதி ஆகிய மூவரும் உள்ளதால் பார்க்கிறோம். லாஸ்யா.எஸ், குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி: வெளியில் புறப்படுபவரை 'எங்கு போகிறீர்கள்' எனக் கேட்பது சரியா...சரியல்ல. வேலை நடக்காவிட்டால் நீங்களே காரணம் என நினைக்கலாம். சாய்சரண்.ஆர், ஆத்தங்குடி, சிவகங்கை: சுவாமியின் முன் எப்போது பூப்போட்டு உத்தரவு கேட்கலாம்?எந்த நல்ல விஷயத்திற்கும் உத்தரவு கேட்கலாம். ஆகாஷ்.எஸ், முக்கூடல், வள்ளியூர்: அம்பிகை உபாசகரின் படத்தை வைத்து வழிபடலாமா?குருவாக ஏற்றுக் கொண்ட சீடர்கள் வழிபடலாம். சரவணன்.டி, மதுக்கரை, கோயம்புத்துார்: நம்பிக்கை துரோகம் செய்தால் பசுவைக் கொன்ற பாவம் சேருமாமே...பாதிக்கப்பட்டவரின் வேதனையோ சொல்லி மாளாது. பசுவை கொன்ற பாவமும் சேரும். அமிர்தா.கே, குளச்சல், கன்னியாகுமரி: காணாமல் போன பொருள் கிடைக்க...போலீசில் புகார் கொடுங்கள். அத்துடன் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். ''கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹு ஸஹஸ்ரவான்அஸ்ய ஸம்ஸ்மரணாதேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே''சொர்ணா.எம், ஆண்டிபட்டி, தேனி: அடிக்கடி தம்பதிக்குள் சண்டை வந்தால்...இது சண்டை அல்ல; அன்பால் வரும் ஊடல். மனைவியுடன் உள்ள முருகன் கோயிலில் வெள்ளிதோறும் விளக்கேற்றுங்கள்.