உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

பார்வதி.ஏ, சிங்காநல்லுார், கோயம்புத்துார்: அரோகரா ஏன்?துன்பத்தை போக்கும் முருகா... உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.லட்சுமி.பி, சென்னிமலை, திருப்பூர்: ஜாதகத்தில் குருபலம் இல்லாவிட்டால்...வியாழன் தோறும் விரதம் இருங்கள். திருமண யோகம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி உண்டாகும்.சரஸ்வதி.எம், கோயம்பேடு, சென்னை: ஜபம் செய்யும் போது விரல் விட்டு எண்ணலாமா?எண்ணலாம். ஆனால் ஜபமாலை பயன்படுத்துவது நல்லது.துர்கா.டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: பாக்கெட் பாலில் அபிஷேகம் செய்யலாமா?செய்யலாம். பசும்பாலில் செய்வது மிகவும் நல்லது.அபிராமி.க, முத்தியால்பேட்டை, புதுச்சேரி: மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்...ஜபிப்பவரை கவசம் போல அது பாதுகாக்கும்.சங்கவி. எஸ், சங்கரன்கோவில், தென்காசி: தினமும் வீட்டில் பூஜை செய்தால்...மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும்.சாம்பவி.ஆ, திருமங்கலம், மதுரை: ஹனுமனுக்கு வீட்டிலேயே வடை மாலை சாத்தலாமா?சாத்தலாம்.முடிந்தால் அருகிலுள்ள குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுங்கள்.லலிதா.கா, கொட்டாரம், கன்னியாகுமரி: கடன் தொல்லையால் சிரமப்படுகிறேன். பரிகாரம் உண்டா...செவ்வாய் தோறும் விநாயகரை வழிபடுங்கள்.சிவகாமி.மு, கல்யாண்புரி, டில்லி: மாரியம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்தினால்...திருஷ்டி, நோய், எதிரி தொல்லை, தடைகள் விலகும்.