உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

நவ. 17 கார்த்திகை 1: விஷ்ணுபதி புண்ணிய காலம். சதுர்த்தி விரதம். ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஏற்கும் நாள். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பழநி முருகப்பெருமான் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். கரிநாள்.நவ. 18 கார்த்திகை 2: சகல முருகப்பெருமான் கோயில்களிலும் சூரஸம்கார கந்த சஷ்டி விழா. திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் கார்த்திகை விழா தொடக்கம். நவ. 19 கார்த்திகை 3: முகூர்த்த நாள். திருவோண விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் இடும்பன் வாகனத்தில் வீதியுலா. இன்று தென்னை, பலா, மா வைக்க நன்று. நவ. 20 கார்த்திகை 4: கார்த்திகை முதல் சோமவாரம். சகல சிவன் கோயில்களிலும் 108 சங்கு தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிேஷக ஆராதனை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.நவ. 21 கார்த்திகை 5: சென்னை திருவல்லிகேணி பார்த்த சாரதி பெருமாள் கோயில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். சுவாமி மலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. நவ. 22 கார்த்திகை 6: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்திலும், அறுபத்துமூவருடன் பவனி. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா. நவ. 23 கார்த்திகை 7: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். அஹோபில மடம் ஸ்ரீமத் 45 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா பிறந்த நாள். தென்னை, மா, புளி, பலா வைக்க நன்று.