கலைமகளே வருக... கருணை மழை பொழிக
குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட பாடல்களை கற்றுக் கொடுங்கள் அருளைப் பெறுவீர்கள்.திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.- ஞானக்கூத்தர்வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டுவெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளைஅரியா சனத்தில் அரசரோடு என்னை சரியா சனம்வைத் தாய். - காளமேகப்புலவர்ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியேஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியேகோக்கும் தமிழ் கொத்து அனைத்தும் வாழியேகூத்தன் கவிச்சக்கரவர்த்தி வாழியே - ஒட்டக்கூத்தர்கலைபயின்ற உளத்தினுக்கும் கரும்பினை முக்கனியை அருட்கலை ஓங்கும்நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச் சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையை நாம் சிந்திப்போமே- வள்ளலார்வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்கொள்ளை இன்பம் குலவு கவிதைகூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்உள்ள தாம் பொருள் தேடி உணர்ந்தேஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்துள் உட்பொருள் ஆவாள்-பாரதியார்