உள்ளூர் செய்திகள்

அவசியமான ஐந்து

விநாயகர், முருகன், சிவபெருமான், பெருமாள், ஐயப்பன் என எந்தத்தெய்வமாக இருந்தாலும் வழிபாடு செய்பவர்கள் கீழ்கண்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது லிங்கபுராணம். * கடவுளின் நாமத்தை எப்போதும் சிந்தித்தல்.* விபூதி, ருத்ராட்சம் அணிந்து கொள்ளுதல்* அடியார்களையும், குருவையும் சிவமாகவே வழிபடுதல் * தனது உள்ளத்திலுள்ள ஆன்மாவையும், கோயிலில் உள்ள சிவலிங்கத்தையும் தினந்தோறும் பூஜித்தல். * கோயில்களில் கடவுளுக்கு நடைபெறும் அபிஷேகத்தையும், அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தையும் அருமருந்தாக பெற்றுக் கொள்ளுதல்.