நம்பிக்கையும் தூய்மையும் வெற்றி தரும் - உணர்ச்சியூட்டுகிறார் சாந்தானந்தர்
* கடவுளை வழிபடுவதாக கூறி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. கடவுள் உன் ஆத்மாவாக உள்ளார். உண்மையான வழிபாடு கடவுளைத் தனது ஆத்மாவாக நம்பி உணர்ந்துக் கொள்வதாகும். அழிவற்ற, என்றைக்கும் மாறாத ஆத்மாவை என்று உணருகிறாயோ அன்று உனக்கு விடுதலை கிடைக்கும்.* நீ கடலின் மேல்பரப்பில் உள்ள அலைகள். நான் கடலாக உள்ளேன். நான் இல்லையென்றால் அலையாகிய நீ எப்படி இருக்க முடியும். மனமாகிய அலைகளே, உன்னை நான் உலக அரங்கில் விளையாட விட்டுள்ளேன். கடல் இல்லாமல் அலைகள் இருக்க முடியாது.* கடவுளுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்ற லட்சியத்தில் உண்மையான உறுதியான நம்பிக்கையும், உள்ளத்தூய்மையும் உனக்கு இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.* தனது கொள்கையில் உறுதியில்லாதவன் மனம் பச்சோந்திபோல் மாறிக் கொண்டேயிருக்கும். அறிவுடையவன் தனது நல்ல செயலிலும், கெட்ட செயலிலும் தனது கொள்கையில் உறுதியாக இருப்பான்.* உனது உள் ஒளியைக் காண நீ முழு மனதுடன் உனது குருநாதரைச் சரணடைய வேண்டும். நீ உண்மையான சீடனாகாத வரை உனக்குள் கடவுளை காண முடியாது. குருநாதரிடமும் உண்மையான சீடனாக இருக்க முடியாது. முழு மனதுடன் உண்மையான சீடனாக மாறினால் தான் நல்ல காலம் பிறக்கும்.* உன்னிடம் பொறாமை, வஞ்சனை,சூதுவாது இருப்பதால்உனக்குள்ளிருக்கும் கடவுள் வெகு தூரத்தில் இருப் பது போன்ற பாவனையை உண்டாக்குகிறது.