உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி!தத ஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந:!!யத்கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்!யத்தபஸ்யஸி கெளந்தேய தத்குருஷ்வ மதர்பணம்!!பொருள்: துாயசிந்தனை, அன்பு, பக்தியுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவனே சிறந்த பக்தன். அப்படிப்பட்டவன் எனக்கு சமர்ப்பணம் செய்யும் இலை, பூ, பழம், தண்ணீர் இவற்றை காணிக்கையாக ஏற்றுக் கொள்வேன். விருப்பமுடன் அவற்றை சாப்பிட்டு மகிழ்வேன். குந்தியின் மைந்தனே! எந்த பணியில் ஈடுபட்டாலும், எதை சாப்பிட்டாலும், எதை ஹோமத்தில் இட்டாலும், எதை தானம் அளித்தாலும், எந்த தவத்தை மேற்கொண்டாலும் அனைத்தையும் நீ எனக்கு அர்ப்பணித்து விடு.