உள்ளூர் செய்திகள்

புதிய ஆண்டில் புதுமை படைப்போம்

2015 புத்தாண்டுக்குரிய தெய்வம் சாஸ்தா. அவருக்குரிய 108 போற்றியை தினமும் படித்து செல்வச் செழிப்பும், நாடு போற்றும் நற்புகழும் பெறலாம். புதிய ஆண்டில் புதுமை படைக்கலாம். ஓம் அரிஹர சுதனே போற்றி ஓம் அன்னதான பிரபுவே போற்றி ஓம் அலங்கார ரூபனே போற்றி ஓம் அனாத ரட்சகனே போற்றி ஓம் அச்சன் கோயில் அரசே போற்றி ஓம் அரனார் திருமகனே போற்றி ஓம் அகிம்சாமூர்த்தியே போற்றி ஓம் அதிர்வெடி பிரியனே போற்றி ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி ஓம் அருள்நெறி அரசே போற்றி ஓம் அமரர்க்கு அதிபதியே போற்றி ஓம் அபய பிரதாபனே போற்றி ஓம் அன்புக்கு அதிபதியே போற்றி ஓம் ஆதரிக்கும் தெய்வமே போற்றி ஓம் ஆபத்பாந்தவனே போற்றி ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி ஓம் ஆரியங்காவு அய்யா போற்றி ஓம் ஆனைமுகன் சோதரனே போற்றி ஓம் ஆதிசக்தி பாலகனே போற்றி ஓம் இருமுடி பிரியனே போற்றி ஓம் இரக்கம் மிகுந்தவனே போற்றி ஓம் இச்சை களைபவனே போற்றி ஓம் இன்னிசை பிரியனே போற்றி ஓம் ஈசன் மகிழ் பாலகனே போற்றி ஓம் ஈர மனம் படைத்தானே போற்றி ஓம் உண்மை நெறியினனே போற்றி ஓம் உத்திர நட்சத்திர சீலனே போற்றி ஓம் ஊமைக்கு அருளினாய் போற்றி ஓம் எங்கள் குலதெய்வமே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் ஏழைப் பங்காளனே போற்றி ஓம் ஏழைக்கு இரங்குபவனே போற்றி ஓம் ஏகாந்த மூர்த்தியே போற்றி ஓம் ஐந்து மலைக்கரசனே போற்றி ஓம் ஐங்கரன் சோதரனே போற்றி ஓம் ஒப்பிலா மாமணியே போற்றி ஓம் ஓங்காரப் பொருளே போற்றி ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி ஓம் கலியுக வரதனே போற்றி ஓம் கணபதி சோதரனே போற்றி ஓம் கற்பூர ஜோதியே போற்றி ஓம் கவுஸ்துப மணியே போற்றி ஓம் கருணாகரக் கடவுளே போற்றி ஓம் கருப்பணன் தோழனே போற்றி ஓம் காக்கும் காவலனே போற்றி ஓம் காட்டில் கிடைத்தவனே போற்றி ஓம் காமனை வென்றவனே போற்றி ஓம் காந்தமலை ஜோதியே போற்றி ஓம் காருண்ய சீலனே போற்றி ஓம் கிருபை புரிபவனே போற்றி ஓம் கிரகதோஷம் நீக்குவாய் போற்றி ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி ஓம் குழத்துப்புழை பாலனே போற்றி ஓம் குருவின் குருவே போற்றி ஓம் குற்றம் களைவாய் போற்றி ஓம் குறை தீர்ப்பவனே போற்றி ஓம் குணக்குன்றே போற்றி ஓம் கேசவன் மகனே போற்றி ஓம் சத்திய சொரூபனே போற்றி ஓம் சபரிபீட வாசனே போற்றி ஓம் சங்கரன் புதல்வனே போற்றி ஓம் சத்குரு நாதனே போற்றி ஓம் சத்துரு சம்ஹாரனே போற்றி ஓம் சரணகோஷ பிரியனே போற்றி ஓம் சச்சிதானந்த மூர்த்தியே போற்றி ஓம் சாஸ்வதமானவனே போற்றி ஓம் சாதுஜனப் பிரியனே போற்றி ஓம் சிந்தூர வண்ணனே போற்றி ஓம் சிங்கார செல்வனே போற்றி ஓம் சியாமள தேகனே போற்றி ஓம் சின்மய சொரூபனே போற்றி ஓம் சிவனார் பாலகனே போற்றி ஓம் சீனிவாசன் மகனே போற்றி ஓம் சுடர் வடிவானவனே போற்றி ஓம் சைதன்ய ஜோதியே போற்றி ஓம் ஞானவடிவானவனே போற்றி ஓம் தவக்கோலம் கொண்டாய் போற்றி ஓம் தர்ம சாஸ்தாவே போற்றி ஓம் திக்கெலாம் நிறைந்தாய் போற்றி ஓம் தீப தரிசனமே போற்றி ஓம் தீன தயாளனே போற்றி ஓம் தேவாதி தேவனே போற்றி ஓம் பம்பைக்கு அரசனே போற்றி ஓம் பக்தர் தம் திலகமே போற்றி ஓம் புலியேறி அமர்ந்தாய் போற்றி ஓம் புவனம் காப்பாய் போற்றி ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி ஓம் பொன்னம்பல வாசனே போற்றி ஓம் மகரஜோதி பிரியனே போற்றி ஓம் மணிகண்ட பிரபுவே போற்றி ஓம் மகிஷி மர்த்தனனே போற்றி ஓம் மதகஜ வாகனனே போற்றி ஓம் மணியின் நாதமே போற்றி ஓம் மங்கள நாயகனே போற்றி ஓம் முக்தி அளிப்பவனே போற்றி ஓம் மெய்யான தெய்வமே போற்றி ஓம் மேன்மை மிக்கவனே போற்றி ஓம் மோகினி பாலகனே போற்றி ஓம் மோகன ரூபனே போற்றி ஓம் வாபர் தோழனே போற்றி ஓம் வான்புகழ் மிக்கவனே போற்றி ஓம் வாழ்வு அளிப்பவனே போற்றி ஓம் விஜய பிரதாபனே போற்றி ஓம் வில்லாளி வீரனே போற்றி ஓம் வீரமணி கண்டனே போற்றி ஓம் வேதப் பொருளோனே போற்றி ஓம் வேந்தன் மகனே போற்றி ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி