உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

வீட்டு பூஜையில் சுவாமிக்கு, அன்னத்திற்கு பதில் பழங்கள் நைவேத்யம் செய்யலாமா?வி.ராமானுஜம், சென்னைபடங்கள் மட்டும் இருந்தால், பழங்கள் நைவேத்யம் செய்தால் போதும். விக்ரகம்(சிலை) வைத்து அபிஷேக பூஜை செய்பவர்கள் அன்னம் நைவேத்யம் செய்ய வேண்டும். மணமக்களை வாழ்த்தும் போது அக் ஷதை இடுவதின் நோக்கம் என்ன?டி.கே சுகுமார், குனியமுத்துார்அக் ஷதை என்பதை 'அக் ஷதா' என்று பிரித்து பொருள் காண வேண்டும். 'க்ஷதா' என்றால் 'அழிதல்' அல்லது 'குறைதல்'.. 'அ' என்பதுடன் சேர்த்து சொல்ல 'இல்லாதது' என பொருள் தரும். அதாவது 'அழிவில்லாதது', 'குறைவில்லாதது' என்று பொருள். குறைவின்றி நீண்ட ஆயுளுடன் மணமக்கள் வாழ அக் ஷதையிட்டு வாழ்த்துகின்றனர். சித்தர் சமாதியை வணங்கினால் உடனடி பலன் என்கிறார்களே....சி.முருகன், கள்ளக்குறிச்சிதவ வாழ்க்கையின் மூலம் கிடைத்த ஞானத்தால் மக்களுக்கு சேவை செய்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களின் ஆன்மிகம், மருத்துவ கருத்துகளை நுால்களாக எழுதி வைத்தனர். அவர்களின் சமாதியை வழிபட்டால் மனத்தெளிவு கிடைக்கும்.* மனக்குழப்பம் தீர எளிய பரிகாரம் இருக்கிறதா?தீனா, சென்னைமனக்குழப்பம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு தீர்வைத் தேடுங்கள். எல்லாம் கடவுள் செயல் என நம்புங்கள். குழப்பிக்கொள்ள அவசியமே இல்லை என்ற எண்ணம் வந்து விடும்..* கோயில் கருவறை போல, தாயின் கருவறையும் புனிதமானது தானா?பா.அஷ்டலட்சுமி, திருப்பூர்ஒரு உயிரை இவ்வுலகில் பிறக்கச் செய்பவர் கடவுள். அவரது எண்ணப்படி அவ்வுயிரைக் கருவாகத் தாங்கி, பத்து மாதம் சுமந்து வலியைப் பொறுத்து பிறக்க செய்பவள் தாய். எனவே இரண்டுமே புனிதமானது.இரவில் கிழிந்த துணியை தைக்கக்கூடாதா?விஷ்ணுகுமாரி, மதுரைமாலையில் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்குல், முடி, நகம் வெட்டுதல், பழைய துணி தைத்தல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கேற்றும்போது, லட்சுமி நம் வீட்டிற்கு வருகிறாள். அந்த நேரத்தில் இவற்றைச் செய்தால் அவளது அருள் குறையும்.