உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* குழந்தைகளின் மனதில் ஆன்மிகத்தை வளர்ப்பது எப்படி?ஆ.சத்யா, கோவை டி.வி., அலைபேசி ஆகியவற்றின் வருகையால் ஆன்மிக எண்ணம் குறைந்து விட்டது. குழந்தைகளுக்கு சோறுாட்டுவதே அலைபேசியில் படமும், பாடலும் காண்பித்து தானே! பெற்றோர் குழந்தைகளுடன் ஆன்மிகம் பற்றி பேசுவதோ, கோயில்களுக்கு அழைத்து செல்வதோ கிடையாது. அதை விடவும் தங்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, இணையதளத்தில் பிடித்ததை பார்க்கவும் குழந்தைகளுக்கு கற்று தருகின்றனர். பள்ளியிலும் மதச்சார்பின்மை என்ற பெயரில் ஆன்மிகம் புறக்கணிக்கப் படுகிறது. தமிழ்ப் பாடத்திற்கு முக்கியத்துவமும் இல்லை. தமிழ்வழி ஆன்மிக நுால்களை வாரம் ஒருமுறையாவது கற்று கொடுங்கள்.விதியை மதியால் வெல்ல முடியுமா.... வலிமை மிக்கது விதி தானே?டி.சாய் ரோகித், கோவைஇப்படித்தான் வாழ்க்கை அமையும் என்பது ஒருவர் செய்த பாவ, புண்ணிய அடிப்படையில் நிர்ணயிக்கபடுகிறது. இதை 'விதி' என்கிறோம். தெய்வத்தால் எழுதப்பட்ட சட்டம் விதி. இதை வெல்வது கடினம் என்றாலும், நம்பிக்கையுடன் வழிபட்டால், வெல்ல வாய்ப்புண்டு. வழிபாட்டிற்கும், மதிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம். மதி என்பது 'அறிவு'. நாம் சிந்திப்பது, செயல்படுவது எல்லாவற்றிற்கும் காரணம் அறிவு தானே! அந்த அறிவே விதியை வெல்ல செயல்பட வேண்டும். விதியை மாற்ற திட்டம் தீட்டுவதற்கு அறிவுக்கு கூடுதல் பலம் தேவை. இதை இறையருளால் மட்டுமே பெற முடியும். நம் அறிவில் நின்று இறைவன் வழிகாட்ட, விதியால் ஏற்படும் துன்பம் அனைத்துமே சூரியனை கண்ட பனியாக மறையும். இதற்கு நம்பிக்கையுடன் வழிபடுவது அவசியம். இதையே விதியை மதியால் வெல்வது என்கிறோம். மழை பெய்வது விதி என்றால், நனையாமல் இருக்க குடைபிடிப்பது மதி.* தெய்வ சங்கல்பம் என்கிறார்களே... பொருள் என்ன?டி.இந்திராணி, சாத்துார்சங்கல்பம் என்றால் 'குறிக்கோள்' என்பது பொருள். நம் குறிக்கோளை சொல்லி அதை பெற, கடவுளை அர்ச்சிக்கிறேன் என்பதையே 'சங்கல்பம் செய்தல்' என்கிறோம். ஒரு குறிக்கோளுடன் நம்மை இப்படித் தான் வாழ வைக்கவேண்டும் என தெய்வம் அருள்புரிவதை 'தெய்வ சங்கல்பம்' என சொல்கிறோம்.மணமக்களுக்கு ஆசியளிக்கும் போது எத்திசை நோக்கி நிற்க வேண்டும்?என்.மதியழகன், பெண்ணாடம்மணமக்கள் கிழக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.ஆசியளிப்பவர்கள் வடக்கு நோக்கி நிற்க வேண்டும்.திருநீறு, குங்குமத்தை எந்த விரலால் நெற்றியில் இட வேண்டும்?எஸ்.தங்கவேலு மதுரைமோதிர விரலால் இடுவது சிறப்பு. சுண்டு விரல், கட்டைவிரல் தவிர்த்து மற்ற மூன்று விரல்களால் முழுமையாகவும் திருநீறு பூசலாம்.புனித தீர்த்தத்தில் நீராடாமல் சிலர், தலையில் மட்டும் தெளிப்பது சரிதானா?ஆர்.சாந்தா, காட்டுக்கூடலுார்நீராட முடியாதவர்கள் இப்படி செய்தால் தவறில்லை. இதற்கு 'புரோட்சணம் செய்தல்' என்று பெயர்.