கேளுங்க சொல்கிறோம்!
* பயம் தீர ஏதாவது பரிகாரம் உண்டா?ஏ.மூர்த்தி, திருவள்ளூர்வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபட்டு இந்த பாடலை பாடுங்கள்; பயம் வராது. நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவதுஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.* நிறைவேறாத ஆசையுடன் இறந்தவரின் ஆன்மா சாந்தி பெற வழியுண்டா?எஸ்.ராஜேஸ்வரி, மதுரைமறுபிறவியில் கடவுள் அருளால், ஆசை நிறைவேறும். இறந்தவரின் ஆசைகளை குடும்பத்தினர் இப்போதே நிறைவேற்றலாம். அவரது நினைவாக கோயில், பள்ளிக்கூடம், மருத்துவமனை அமைத்தல் போன்ற தொண்டுகளில் ஈடுபட்டால் ஆன்மா சாந்தி பெறுவதோடு, சமுதாயமும் பயன் பெறும்.பாடல் பெற்ற கோயிலுக்கும், பிற கோயிலுக்கும் வேறுபாடு உண்டா?பி.ஸ்ரீபாதராஜன், சென்னைஇல்லை. அன்பே வடிவான சிவனே எல்லா கோயில்களிலும் இருக்கிறார். சிவனடியார்களான நாயன்மார் வாழ்க்கையோடு பாடல் பெற்ற கோயில்கள் தொடர்பு கொண்டவை. பஞ்சகவ்ய அபிஷேகத்தின் சிறப்பு என்ன?எஸ்.ரவிச்சந்தர், பெங்களூருபால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவை பஞ்சகவ்யம். இதனால் அபிஷேகம் செய்தால் சிவன் அருள் கிடைக்கும். நீண்ட ஆயுள், உடல் நலம், வெற்றி கிடைக்கும். பசுவின் உடம்பில் இருந்து கிடைக்கும் பஞ்ச கவ்யத்தை, சிவன் ஏற்பது நாம் செய்த புண்ணியமே.நவக்கிரக சன்னதியில் இரும்பு அகலில் விளக்கேற்றுவது ஏன்?என்.சொக்கலிங்கம், திருச்சுழிஒவ்வொரு கிரகத்துக்கும், ஒரு உலோகம் உண்டு. சனிபகவானுக்கு உரியது இரும்பு.'ஆட்கொண்டார்' என்கிறார்களே...பொருள் என்ன?பொன்.குமரவேல், ராஜபாளையம்கடவுள் நம்மை வழிநடத்துவதை 'ஆட்கொள்ளுதல்' என்பர். ஒரு விஷயத்தை சரியென்று கருதி ஒருவர் ஈடுபட்டாலும், அதை வேண்டாம் என தடுத்துக் காப்பதை 'தடுத்தாட்கொள்ளுதல்' என்று சொல்வர். நாயன்மாரில் ஒருவரான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டி சிவபெருமான் ஆட்கொண்டார். அதேபோல் மற்றொரு நாயன்மாரான சுந்தரரின் திருமணத்தின் போது 'இவன் எனது அடிமை' என ஓலையைக் காட்டி தடுத்தாட்கொண்டார்.