உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* செய்யும் தொழிலே தெய்வம் என்றால் கோயில் வழிபாடு தேவையில்லையா?எஸ்.ரித்திகா, சென்னைதொழிலை தெய்வமாக கருத வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது இது. 'தெய்வம்' என்ற சொல் இதில் இருப்பதே கோவில் வழிபாட்டின் அவசியத்தை உணர்த்தத் தான். தொழிலே தெய்வம் என்பதால் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என அதில் கூறப்படவில்லை.* வாசல் நிலையின் கீழ் உலோகத் தகடு யந்திரம் வைப்பது ஏன்?கே.ஹாசினி, புதுச்சேரிதலை வாசல் நிலை சுபிட்சத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. தீய சக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கும் சக்தி இதற்குண்டு. அதற்கு பலம் சேர்க்கவே யந்திரம், நவரத்தினங்களைப் பதிக்கின்றனர். ஆகமம் என்பதன் பொருள் என்ன?பி.சிவராமன், சிவகங்கைஆகதம், கதம், மதம் என்னும் சொற்களின் சேர்க்கை ஆகமம். 'ஆகதம்' என்றால் சிவனிடமிருந்து உபதேசமாக 'வந்தது' என்பது பொருள். சிவன் உபதேசிக்க பார்வதியின் செவியைச் சென்றடைந்ததால் 'கதம்' எனப்பட்டது. மகாவிஷ்ணுவால் மதிக்கப்படுவதால் 'மதம்' எனப்பட்டது. 'ஆகமம்' என்ற சொல் கோயில் வழிபாடு, பூஜை முறைகளை விளக்குகிறது.* நாரதர் என குழந்தைக்கு பெயரிடலாமா?எல்.விஸ்வா, கோவைதவறு இல்லை! ஆனால் கலகம் செய்யாமல் இருக்க வேண்டுமே! பிறகு குழந்தை எங்கு சென்றாலும் இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என எல்லோரும் உங்களைக் கேட்பார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்.* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதன் பொருள் என்ன? பி.சித்தார்த், ராமநாதபுரம்மூர்த்தி என்பது கருவறையில் உள்ள மூலவர் சிலை. தலவிருட்சம் (தலம்) என்பது கோவில் கட்டும் முன்பே சுவாமி எழுந்தருளிய இடம். கோயில் உருவாகும் முன்பே அங்கிருந்த மரம் 'தலவிருட்சம்'. தீர்த்தம் என்பது நீராடுவோரின் பாவம் போக்குவதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றிலுமே தெய்வீகம் நிரம்பியிருக்கும். தல விருட்சத்தை தினமும் மூன்று முறை வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.