கேளுங்க சொல்கிறோம்!
* ஈசான்ய மூலையில் மாடிப்படி இருக்கலாமா?பி.பிரணித் வைபவ், விருதுநகர்மாடிப்படி கூடாது. கோயிலுக்கு கருவறை எப்படி முக்கியமோ, அது போல வீட்டிற்கு ஈசான்ய மூலை. இங்கு பூஜையறை, தண்ணீர் தொட்டி, வயதானவர்கள் தங்கும் அறை இருக்கலாம்.* பெண்கள் மூக்குத்தி அணிவதில்லையே!எஸ். ஆராத்யா, காஞ்சிபுரம்போற்றுதலுக்கு உரியவர்கள் பெண்கள். மூக்குத்தி, தோடு, செயின், வளையல், மெட்டி, கொலுசு என மங்கள அணிகலன்களை பெண்கள் அவசியம் அணிய வேண்டும். ஆபரணங்களைத் தவிர்ப்பது நல்லதல்ல.எத்தனை பிரதோஷம் தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்?எம்.சித்தார்த், சென்னைவிருப்பம் நிறைவேற பதினாறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவன், நந்தீஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் பிரதோஷ விரதமிருக்க சிவபதம் கிடைக்கும்.* கார்த்திகை சோமவாரத்தின் சிறப்பு என்ன?கே.துஷ்யந்த், புதுச்சேரி'சோம' என்பதற்கு 'உமையவளுடன் இருக்கும் சிவன்' என்பது பொருள். சிவனுக்கு திருமணம் நிகழ்ந்த கிழமை, திங்கள் என்பதால் அதனை 'சோம வாரம்' என்கிறோம். கார்த்திகை திங்கட்கிழமையில் மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. சிவபெருமானுக்கு சங்காபிஷேகம், மகா அபிஷேகம் செய்ய ஏற்ற நாள் கார்த்திகை மாத திங்கட்கிழமை.தெய்வங்களுக்கு கையில் ஆயுதம் இருப்பது ஏன்?எல்.மந்த்ரா, மதுரைவேல், திரிசூலம் போன்ற ஆயுதங்களோடு சில தெய்வங்களிடம் அக்னி, தாமரை, ஜப மாலை போன்ற வையும் இருக்கும். இது வழிபடுவோரைத் தீயசக்திகளிடமிருந்து காப்பதே. அமாசோமவாரம் பற்றி சொல்லுங்கள்?டி.ஹாசினி, கோவைதிங்களும், அமாவாசையும் இணையும் நாள் அமாசோமவாரம். இந்நாளில் அதிகாலையில் நீராடி, கோயிலில் உள்ள அரச மரத்தை 11 முறை சுற்றி வருவர். இதற்கு அமாசோம பிரதட்சணம் என்று பெயர். நோய் மறையும். எண்ணியது நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.