கேளுங்க சொல்கிறோம்!
* முருகனுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன?கே.அஸ்வின், சென்னை'ஷோடச' நாமங்கள் என்னும் 16 பெயர்கள் ஆகம சாஸ்திரத்தில் உள்ளன. 108 பெயர்கள் அஷ்டோத்திரத்திலும், 1008 பெயர்கள் சகஸ்ர நாமத்திலும் உள்ளன. எத்தனை இருந்தாலும் அழகு தமிழில் 'முருகா' என அழைத்தாலே அருளை வழங்குவான். * ஸ்ரீருத்ரம், மிருத்யுஞ்ஜய மந்திரங்களைப் பெண்கள் படிக்கலாமா?கே.காயத்ரி, விழுப்புரம்பூணுால் அணிந்து காயத்ரி மந்திரம் உபதேசம் பெற்றவர்கள் இந்த மந்திரங்களை ஜபிக்கலாம். இதற்கு ஈடான திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம், அபிராமி பட்டரின் திருக்கடவூர்ப்பதிகம், திருஞான சம்பந்தரின் கோளறு பதிகங்களை படிக்கலாம். * சுதர்சன ஹோமம் என்பது என்ன?ஆர்.பூஜா, தேனிமகாவிஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதம் 'சுதர்சனம்'.நோய், எதிரி பயம், மனக்குழப்பம், திருஷ்டி போன்றவற்றில் இருந்து காக்க வல்லது சுதர்சனம். இதனை வழிபடவும், யாகம் செய்து பலன் பெறவும் விதிமுறைகள் உள்ளன. சுதர்சன ஹோமத்தை தகுதியானவர்களின் மூலம் நடத்தினால் நன்மை கிடைக்கும்.* கடவுளை எந்த வடிவில் (ஆண், பெண்) வழிபடுவது சிறந்தது?ஆர்.சம்யுக்தா, கோவைபக்தர்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப ஆண் அல்லது பெண் வடிவத்தில் கடவுள் அருள்பாலிக்கிறார். அர்த்தநாரீஸ்வரர், லட்சுமி நாராயணர் வழிபாடு ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்துகிறது. விரும்பும் வடிவத்தில் வழிபடுங்கள்.அகால மரணத்திலிருந்து தப்பிக்க வழியுண்டா?வி.சாய்சரண், திருவள்ளூர்நாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயிலில் 'காலசம்ஹார மூர்த்தி' என்னும் பெயரில் சிவனுக்கு சன்னதி உள்ளது. திங்கட்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட்டால் நீண்டநாள் வாழும் பாக்கியம் கிடைக்கும்.அம்மை வார்த்திருக்கும் வீட்டில் சுபநிகழ்ச்சிக்குப் போகலாமா?சி.ஸ்வேதா, நெய்வேலிஅம்மன் கோயிலில் தீர்த்தம் வாங்கப் போகலாம். தலைக்கு தண்ணீர் விட்ட பிறகே சுபநிகழ்ச்சிக்கு செல்லலாம். அதுவரை வீட்டில் எண்ணெய், கடுகு, மிளகாய் தாளிக்க கூடாது.