உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

கடவுள் நம்பிக்கை இல்லாதவரைக் கடவுள் ஏன் காப்பாற்றுகிறார்?எல்.மகாதேவன், சிவகங்கைபெற்றோர் பிள்ளைகளிடம் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதுபோல கடவுளுக்கு பாகுபாடு கிடையாது.* நவக்கிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை?கே.கிஷோர், மதுரைகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வானில் சஞ்சரிப்பதை ஞானிகள் ஆத்மசக்தி மூலம் அறிந்தனர். அதன் அடிப்படையில் நவக்கிரகங்கள் வெவ்வேறு திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.பூஜையறையில் வீணையை வைக்கலாமா?பர்வதவர்த்தினி, ராமேஸ்வரம்இசைக்கருவிகள் தெய்வீகத்தன்மை கொண்டவை. அதிலும் வீணை சரஸ்வதிக்கு உரியது. சந்தனம், குங்குமம் இட்டு பூஜிப்பதை விட அதை கற்றுக் கொண்டு இசை வழிபாடாக செய்தால் இன்னும் நன்மை ஏற்படும்.* ருத்ராட்சம், ஸ்படிகமாலையை திருமணமானவர்கள் அணியலாமா?வி.ருத்ரன், புதுச்சேரிஅணியலாம். அணிபவருக்கு ஒழுக்கம், பக்தி அவசியம்.* முன்வினை பாவம் தீர வழி உண்டா?எம்.சந்துரு, கோவைகோயில் வழிபாட்டை அன்றாடக் கடமைகளில் ஒன்றாகச் செய்தால் கர்மவினை என்னும் முன் வினைப்பாவம் தீரும். அவ்வையார் 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என இதன் சிறப்பைக் கூறியுள்ளார். * கொரோனா வைரஸ் பரவக் காரணம் என்ன?பி.சந்தியா, சென்னைதர்மத்தை மனிதர்கள் புறக்கணித்ததால் இயற்கை அளித்த தண்டனை இது. இனியாவது இயற்கையை நேசித்து வாழ பழகவேண்டும்.ஜென்மசனியை எதிர்கொள்வது எப்படி?சி.பவித்ரா, காஞ்சிபுரம்தர்மநெறி தவறாதவர்களை சனீஸ்வரர் தண்டிக்க மாட்டார். ஜென்மச்சனியால் சிரமப் படுபவர்கள் பிரதோஷத்தன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் சிவன், நந்தீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிப்பதும், சிவபுராணத்தை படிப்பதும் நல்லது.திருஷ்டியை போக்க என்ன செய்யலாம்?கே.அம்பிகா, பெங்களூருசெவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் சாம்பிராணி இடுதல், தேங்காயை தலையைச் சுற்றி உடைத்தல், வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தல், கற்றாழை கட்டுதல் ஆகியவற்றில் முடிந்ததைச் செய்யுங்கள்.