கேளுங்க சொல்கிறோம்
க.அர்ச்சுனன், செங்கல்பட்டு.*வாசலில் சங்கு பதிப்பது ஏன்?திருஷ்டியை தடுக்கும் சக்தி கொண்டது என்பதால் சங்கினை பதிக்கிறோம். த. நேரு, வெண்கரும்பூர், கடலுார். *திருமணத்தன்று அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது எதற்காக?கற்பு நெறியுடன் வாழ்ந்து வானில் நட்சத்திரமாக திகழ்பவர்கள் அருந்ததி, வசிஷ்டர் தம்பதியினர். இவர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக.ஜீ.நீலமேகம், உத்தமபாளையம், தேனி.*போற்றி, சரணம், வாழ்க - இதில் எது சிறப்பானது?வாழ்க, போற்றி, சரணம் என சிவபெருமானை பலவிதமாக போற்றுகின்றனர். மூன்றுமே சிறப்பானது. அ.ரவீந்திரன், மணிகெட்டி பொட்டல், கன்னியாகுமரி. *குழந்தைக்கு எத்தனை வயது வரை நெற்றியில் கறுப்பு பொட்டை வைக்கலாம்?திருஷ்டி, கிரக தோஷத்தில் இருந்து பாதுகாக்க ஒரு வயது வரை வைப்பது அவசியம். ஆயுள் முழுவதும் பெண் குழந்தைகள் வைக்கலாம். அ.முரளிதரன், பெங்களுரு.*வாசல் தெளிக்கும் போது, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது ஏன்?கிருமி நாசினியான மஞ்சள் கலந்த நீரை தெளித்தால் நோய்கள் வராது. அதோடு மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர். *கோயிலில் என்னென்ன சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்?திருமணம், நட்சத்திர பிறந்த நாளன்று ஆயுள்ேஹாமத்தை நடத்தலாம். 50, 60, 80 வயதில் நடத்தும் திருமணத்தை நடத்துவது விசஷேம். வி.வினித், பாபநாசம், திருநெல்வேலி.*ஊழ்வினை உறுத்து வந்துாட்டும் என்பதன் பொருள்நாம் முற்பிறவியில் செய்த செயல்களை ஊழ்வினை என்கிறோம். இது நம்மை விடாமல் துரத்தும். மனிதனாக மண்ணில் பிறப்பதும், ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதும் ஊழ்வினையால்தான். எஸ்.கஸ்துாரி, கோயம்புத்துார்.*ஏழைகளின் கற்பக மரம் எது?ஏழைகளின் கற்பக மரம் தென்னை. இதை வளர்ப்பவர் பணக்காரராக மாறுவார். எஸ்.ராஜேந்திரன், தமிழர்என்கிலேவ், டில்லி.*கனவு தொல்லையால் சிரமப்படுகிறேன். என்ன செய்யலாம்?நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டு தெய்வ சிந்தனையுடன் உறங்கச் செல்லுங்கள். எல்.கந்தரூபி, திருவேற்காடு, திருவள்ளூர். *லலிதா சகஸ்ர நாமத்தின் சிறப்பு என்ன?லலிதாம்பிகையின் கருணையை விளக்கும் நுால். பாஸ்கர ராயர் என்பவர் இதற்கு உரையெழுதி திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் கோயிலில் சமர்ப்பித்த போது, அம்பிகை தோன்றினாள். இதை படிப்பவர்கள் குறையின்றி வாழ்வர்.