கேளுங்க சொல்கிறோம்
ஆ.சுபாஸ்ரீ, திருமங்கலம், மதுரை. *சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?''நமஸ்தேஸ்து ஜகன்மாத:கருணாம்ருத ஸாகரே|கர்ப்ப ரக்ஷாகரி தேவிஸுகப்ரசவ மேவஹி|'' இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அம்பிகையை தினமும் வழிபடுங்கள். உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவளே! கருணைக் கடலாகத் திகழ்பவளே! கருவில் உள்ள உயிரைக் காப்பவளே! சுகப்பிரசவம் நடக்க அருள்புரிவாய். கே.துஷ்யந்த் ஸ்ரீதர், பெங்களூரு.*துாக்கம் வராமல் இருக்க காயத்ரி மந்திரம் ஜபிக்கலாமா?துாக்கத்தை தடுக்கக் கூடாது. காயத்ரி மந்திரம் ஜபித்தால் அறியாமை என்னும் துாக்கம் அகலும். 'என் புத்தி மங்காமல் இருக்க கடவுள் அருள்புரியட்டும்' என்பது இதன் பொருள். எல்.ரமணி, திருவட்டாறு, கன்னியாகுமரி*ஒரே திருப்பணிக்கு இரு நபரிடம் நன்கொடை பெறலாமா?திருப்பணி நிறைவேறும் வரை எத்தனை நபரிடமும் நன்கொடை பெறலாம். எம்.ஆதித்யா, ஆர்.கே.புரம், டில்லி.*ஸ்ரீசக்கர வழிபாடு பற்றி... ஸ்ரீசக்கர வழிபாட்டை 'பரிணாம நிலை மேரு' என குறிப்பிடுவர். கோயில்களில் உள்ள ஸ்ரீசக்கரத்தை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். ஆ.மாணிக்கம், பல்லடம், திருப்பூர்.*மகம் நட்சத்திரத்தில் புகுந்த சனி என்ன செய்யும்?மகம் நட்சத்திரம், அதன் ராசி சிம்மம், அதன் அதிபதி சூரியன். இந்த மூன்றும் சனிக்கு பகைவர்கள். இதனால் இந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் போது கோபமாக இருப்பதால் நாட்டுக்கு தீங்கு ஏற்படும். ஸ்ரீருத்ரம், மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம், சுதர்சன அஷ்டகம் ஜபிக்க பாதிப்பு குறையும். டி.மைதிலி, சிதம்பரம், கடலுார்.*மாதம் மும்மாரி பெய்யாமல் போனது ஏன்?மரங்களை வெட்டுவதாலும், இயற்கை வளத்தை சுரண்டுவதாலும் மழைவளம் குறைந்து விட்டது.வி.பூமணி, கழுகுமலை. துாத்துக்குடி.*பெண்களின் சபரிமலை எங்குள்ளது?திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., துாரத்திலுள்ள ஆற்றுக்கால் பகவதி கோயிலே பெண்களின் சபரிமலை.ஆ.ராமகிருஷ்ணன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம். *உற்ஸவர் வீதியுலா வரும் போது மூலவருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்யலாமா?செய்ய வேண்டாம். உற்ஸவராக வீதியில் உலா வருபவரும் மூலவரே. அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். கு.சசி, சிவகாசி, விருதுநகர். *வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க யாரை வழிபடலாம்?ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) சரபேஸ்வரரை வழிபட்டால் தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைக்கும்.