உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 எஸ்.அகிலா, வேளச்சேரி, சென்னை.*கார்த்திகையன்று விரதமிருந்து மொட்டை அடிக்கலாமா?மொட்டை அடிக்கலாம். காலம் காலமாக பழநி, வைத்தீஸ்வரன் கோயில்களில் கார்த்திகையன்று விரதமிருந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள். வி.ரமணி, நாகர்கோவில், கன்னியாகுமரி.*பிரதோஷத்தன்று பயறு கலந்த வெல்ல அரிசி தருவது ஏன்?@பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் உக்கிரம் தாங்காமல் நந்தீஸ்வரர் மயக்கமானார். அதிலிருந்து விடுபட காப்பரிசி (வெல்லம் கலந்த பச்சரிசி) கொடுத்தார் சிவபெருமான். இதனடிப்படையில் பிரதோஷத்தன்று காப்பரிசி தருவர். தற்காலத்தில் பயறும் சேர்க்கின்றனர்.ஆர்.நந்தினி, மேலுார், மதுரை.*கருமாரியம்மன் பாதத்தில் ஒரு பெண்ணின் முகம் உள்ளதே...அது பரசுராமரின் தாயார் ரேணுகாதேவி. இவர் பார்வதியின் மற்றொரு அம்சம். ஆர்.ரவி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு. *கோள்சாரம் என்றால் என்ன?கிரகங்களின் இயக்கத்தைப் பற்றிச் சொல்வது கோள்சாரம். கோள் - கிரகம். சாரம் - சஞ்சாரம் (இயக்கம்). ஆர்,ராமானுஜம், பெரியகுளம், தேனி. *பெண்புலவர் அவ்வையார் ஒருவரா பலரா...அவ்வையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். வள்ளல் அதியமான் காலத்தில் வாழ்ந்தவர் வேறு. இடைக்காலத்தில் விநாயகர் அகவல் பாடியவர் வேறு. எப்படி இருப்பினும் அவர் தமிழுக்கு தொண்டு செய்தவர். எம்.தருண், தமிழர் என்கிளேவ், டில்லி.*பொறாமைத்தீ அடங்க யாரை வழிபடலாம்?தன்னம்பிக்கையை வளர்த்தால் பொறாமைத்தீ வராது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துங்கள். பிரச்னை தீரும். எம்.பன்னீர்செல்வம், திருக்கோவிலுார், விழுப்புரம். *கந்த புராணம் முற்றோதல் வீட்டில் நடத்தலாமா?நடத்தலாம். பக்தி இலக்கியம் அனைத்தையும் முற்றோதல் நடத்தலாம். அத்துடன் அன்னதானம் அளிப்பதும் புண்ணியம். எம்.ராஜாராம், தச்சநல்லுார், திருநெல்வேலி. *உற்ஸவர் சிலை தேய்ந்திருந்தால் புதிதாக செய்யலாமா?பழைய சிலைகள் நாளடைவில் தேய்வது இயல்பே. ஆனால் காலம் காலமாக பூஜை செய்து அதிக சக்தியுடன் இருக்கும் அவற்றை மாற்றத் தேவையில்லை. உதாரணம்: திருச்செந்துார் முருகப்பெருமான் உ.அருணாதேவி, அவினாசி, திருப்பூர்.*புதிய மூலவரை பிரதிஷ்டை செய்யும் போது சேதமடைந்த சிலையை என்ன செய்யலாம்?கடலில் விட்டு விடுவது வழக்கம். இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அவற்றை பாதுகாக்க வேண்டும் என்கிறது தொல்லியல் துறை. அதுவும் நல்ல விஷயமே!.