உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

 ஆர்.ரமா பிரபா, அலங்காநல்லுார், மதுரை.*கனவுகளை பிறரிடம் சொல்லலாமா...சொல்லக் கூடாது. மீறி நல்ல கனவை மற்றவர்களிடம் சொன்னால் பலிக்காது. கெட்ட கனவாக இருந்தால் நம் மதிப்பு குறையும். எஸ்.புனிதா, நெலமங்கலா, பெங்களூரு.*ஊர் கூடி தேர் இழுப்பது போல என்கிறார்களே...மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை இப்படி சொல்கிறார்கள். உடலாகிய தேரில் உயிர் என்னும் கடவுள் எழுந்தருளியிருக்கிறார் என்பதே இதன் தத்துவம். எம்.சங்கரி, மறைமலைநகர், செங்கல்பட்டு.*பூஜையின் முடிவில் 'ஓம் சாந்தி' எனச் சொல்வது ஏன்?மனஅமைதியே சாந்தி. கடவுள் அருளால் எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதே இதன் நோக்கம். பி.வினோதினி, திருவேங்கடம், திருநெல்வேலி.*செய்யும் தர்மம் நம் சந்ததியைச் சேருமா?செய்யும் தர்மம் நம் சந்ததியைக் காக்கும்.டி.மகாராஜன், குடிமங்கலம், திருப்பூர்.*புது மணப்பெண்ணிற்கு தாலி பிரித்துக் கட்டுவது அவசியமா?திருமணமான மூன்று அல்லது ஐந்தாம் மாதத்தில் வரும் முகூர்த்த நாளில் சுமங்கலிகள் முன்னிலையில் இந்தச் சடங்கை நடத்துவர். எல்.நிவாசினி, ஜல்விஹார், டில்லி.*அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளோம். புதுமனை புகுவிழா நடத்துவது எப்படி?அருகிலுள்ள கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து தரை தளத்தில் கோபூஜையை நடத்துங்கள். பிறகு வீட்டின் நிலைக்கு பூஜை செய்து விட்டு கணபதி ஹோமத்தை நடத்துங்கள். ஜி.சுரேந்தர், பூதப்பாண்டி, கன்னியாகுமரி.*உண்மையான வெற்றியை அடைவது எப்படி?எல்லாம் கடவுளின் செயல் என நம்பி செயல்படுங்கள். போட்டி, பொறாமை இல்லாமல் மனத்துாய்மையுடன் வாழ்வதே உண்மையான வெற்றி. வி.ஆர்த்தி, கடமலைக்குண்டு, தேனி.*நிர்வாகத்தை திறம்பட நடத்த பரிகாரம் சொல்லுங்கள்?தேவ கணங்களை திறம்பட நிர்வகிப்பதால் விநாயகருக்கு 'கணநாதர்' என்று பெயர். வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப!நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா!!என்னும் மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லுங்கள். பி.ஆனந்தி, பிராட்வே, சென்னை.*லட்சார்ச்சனை என்பதன் பொருள் என்ன?ஒவ்வொரு கடவுளுக்கும் ஆயிரம் திருநாமம்(பெயர்) உண்டு. இதை சொல்லி அர்ச்சனை செய்வது சகஸ்ர நாமம். இதை நுாறு முறை செய்தால் லட்சார்ச்சனை. ஆர்.ராமு, வானுார், விழுப்புரம்.*பெற்றோரின் சமாதியை பராமரிக்காவிட்டால் தோஷம் ஏற்படுமா?பிதுர் தோஷம் ஏற்படும். ஆண்டுதோறும் வழிபாடு நடத்துவது அவசியம்.