கேளுங்க சொல்கிறோம்!
* புத்திரதோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்பெ. பொன்ராஜபாண்டி, மதுரைபுத்திரதோஷம், இரண்டு விதமாக உண்டு. ஒன்று குழந்தைப் பேறின்மை, மற்றொன்று ஜாதக ரீதியாக குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுவது. குழந்தைப் பேறின்மைக்கு திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் செல்லுதல், சந்தான கோபாலரை வழிபடுதல் நல்லது. ஜாதக ரீதியான புத்திரதோஷத்திற்கு தகுந்த ஜோதிடர் அறிவுரைப்படி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.**பெற்றோர் செய்த பாவம் சந்ததியைத் தொடருமா? அதற்குரிய பரிகாரம் என்ன?டி.எஸ்.ரகுநாதன், கோவைபிள்ளைக்கு தெய்வபலம் அதிகமிருந்தால் பெற்றோர் செய்த பாவம் அவர்களைத் தாக்காது. இருந்தாலும், பாவம் சந்ததியைத் தொடரும் என்பது உண்மையே. தெய்வ வழிபாடு, தானதர்மம் மூலம், இதை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?அ. ஏகப்பன், தேவகோட்டைஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.* சனியின் பாதிப்பிலிருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம்?எஸ்.புவனா, சென்னைசனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று தான் பொருள். இன்றைய விஞ்ஞானிகள் கூட, சனி கிரகத்தை ஆராய்ந்து அது பனிமயமாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய வேண்டிய காலங்களில் வாரி வழங்குவதில் வள்ளல். கெடுதலைச் செய்ய வேண்டிய சூழலில், சற்று பாதிப்பையும் தரும் குணம் படைத்தவர். எல்லாரும் பயப்படும் அளவிற்கு கெட்டவர் கிடையாது. இவரது பாதிப்பிலிருந்து விடுபட, பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் உயர்ந்தது. மேலும், அன்றைய தினம் காளை மாட்டிற்கு அரிசி, வெல்லம், எள் கலந்து கொடுப்பது சிறந்த பரிகாரம்.மாடியில் தொட்டிக்குள் துளசிச்செடி வைத்து பூஜிக்கலாமா?எம். இந்துமதி, காஞ்சிபுரம்அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தும். கீழ்தளத்தில் வீடு இருப்பவர்கள், நடுமுற்றம், வாசல் அலல்து கொல்லைப்புறத்தில் வைத்து வழிபடுவதே சிறந்தது.