கேளுங்க சொல்கிறோம்!
** கோயில் குளத்தில் நீராடச் சென்றாலும், வீட்டில் நீராடி விட்டுத் தான் போக வேண்டுமா?ஆர். கீதா, சின்னக்காஞ்சிபுரம்குளிப்பது என்பது வேறு. புனித நீராடல் என்பது வேறு. சோப்பு முதலியவற்றை உபயோகித்து அழுக்கைப் போக்கிக் கொள்ள புண்ணிய தீர்த்தங்கøளைப் பயன்படுத்தக் கூடாது. கோயில் குளத்தில் இறைவன் திருநாமத்தை உச்சரித்தவாறு மூழ்கி எழ வேண்டும். இதற்கே புனித நீராடல் என்று பெயர். கோயில் குளத்தில் பல் துலக்குவது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாடக் கடமைகளைச் செய்வது பாவமாகும். பலரும் புனித நீராட வேண்டிய தீர்த்தத்தை மாசுபடுத்தாமல் இருப்பது அவசியம். கோயிலில் நீராடும் முன் வீட்டில் குளித்து விட்டுச் செல்வது அவசியம்.நோய் நொடி நீங்க எந்த ஹோமத்தை வீட்டில் நடத்தலாம்?ஜெயந்தி, கடலூர்தன்வந்திரி ஹோமம் செய்ய வேண்டும். மூலிகைப்பொருட்களால் இந்த ஹோமத்தைச் செய்வது நல்லது. கூடவே, மிருத்யுஞ்ஜய ஹோமமும் செய்யலாம்.* மந்திரம் கால்... மதி முக்கால் என்பது உண்மையா? த.ஜா. குபேந்திரன், பரமக்குடிமுயற்சியே செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் விழும் என்று வீணே இருப்பவர்களை எப்படியாவது திருந்தச் செய்ய இந்த முதுமொழி ஏற்பட்டது. மதி என்றால் அறிவு. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து முயற்சிக்கும் போது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதே மந்திரம். அதாவது முயற்சியே செய்யாமல் மந்திரத்தை மட்டும் நம்பி சோம்பேறிகளாகும் பலருக்கு சொல்லப்பட்டதே இந்த முதுமொழி. ''தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்'' என்ற திருக்குறளும் இங்கு சிந்திக்கத்தக்கது.* அரசுத்தேர்வில் வெற்றி பெற ஆன்மிக ரீதியாக எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்? சிந்தன், திருப்பூர்தேர்வில் வெற்றி பெற, முதலில் அன்றாடம் நன்கு படித்து பயிற்சி பெறுங்கள். அறிவு வளம் பெற சரஸ்வதியை வழிபடுங்கள். பயிற்சியும்,வழிபாடும் மனோபலத்தை அளிக்கும். பிறகு வெற்றிக் கனியை எளிதில் பறித்து விடலாம். வெற்றி பெற வழிபாடு மட்டுமே போதும் என்றால் புத்தகம், பேனா இவையெல்லாம் தேவையில்லாமல் போய் விடுமே! வடை மலை எந்தெந்த கடவுளுக்கு உகந்தது?டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மதுரைஆஞ்சநேயருக்கு மட்டுமே வடைமாலை சாத்தும் வழக்கம் இருந்தது. இப்போது பைரவர், துர்க்கை போன்ற தெய்வங்களுக்கும் வடைமாலை அணிவிக்கிறார்கள். ஆபரணம் அணிவிப்பது போல பழம், காய்கறி, பட்சணம் போன்றவற்றாலும் அலங்கரித்து வழிபடும் முறையில் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.