உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* சுமங்கலிப் பெண்கள் ருத்ராட்ச மாலை அணிந்து ஜபம் செய்யலாமா?ந.வெ.ராமன், சிதம்பரம்விபூதி, ருத்ராட்சம் இரண்டும் சிவ சின்னங்கள். நித்ய மங்களகரமான இவற்றை சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்வதால் சிவனருள் பூரணமாகக் கிடைக்கும். பெண்களைப் போல் ஆண்களும் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடலாமா?ஆர்.சுப்புலட்சுமி, சென்னைஆண்களுக்கும் துர்க்கை வழிபாட்டின் அவசியங்கள் இருக்கின்றனவே. திருமணத்தடை, புத்திரப்பேறு என எவ்வளவோ விஷயங்களுக்காக பெண்களைப் போல் ஆண்களும் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.* சனி பிரதோஷத்திற்கு விசேஷ மகத்துவம் ஏதும் உண்டா?பி.என்.விஸ்வநாதன், மதுரைபிரதோஷம் ஐந்து விதமாக கூறப்பட்டுள்ளது.நித்ய பிரதோஷம்: தினமும் மாலை 4.30- 6.00 மணிக்குள்.பட்ச பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி நாள்மாச பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி நாள்மகா பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி சனிக்கிழமையுடன் கூடும் நாள். இதைத் தான் சனி மகாபிரதோஷம் என்பர். பாற்கடல் விஷத்தில் இருந்து தேவர்களைக் காப்பாற்றிய நந்தி தேவருக்கு சிவபெருமான் காப்பு அரிசி கொடுத்த நாள் இது. பிரளய பிரதோஷம்: அகில உலகங்களும் சிவபெருமானிடம் ஒடுங்குகின்ற மகாபிரளய காலம் (உலகம் அழியும் காலம்). இது எப்போது வருமென யாருக்கு தெரியும்** முதியோர் இல்லங்களே இல்லாமல் போக, பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை கூறுங்கள்.எஸ். பாமா, திருவான்மியூர்பிள்ளைகள் என்று மட்டும் பிரிக்காமல் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. தான் நினைப்பது தான் சரி என்று எண்ணுவது முதல் தவறு. பிள்ளைகள் எண்ணத்திற்கு மதிப்பளிப்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். தலைமுறை இடைவெளியின் காரணமாக, பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று பெற்றோரும், வயதானதால் எதுவும் புரிய வில்லை என்று பெற்றோர் பற்றி பிள்ளைகளும் எண்ணுவதால் தான், ஒருவருக்கொருவர் மனக்கசப்பு உண்டாகிறது. மகனின் திருமணத்திற்குப் பிறகு, பேரப்பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும் பெற்றோர் மருமகளை முழுமையாக ஏற்பதில்லை. அதே போல, பிள்ளைகள் மனைவிக்காக பெற்றோரைப் புறக்கணிப்பதும் கூடாது. இரு பக்கமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோரும் பக்குவத்துடன் நடந்து கொண்டால் பிரச்னை தீரும்.திருமணத்தின் போது பொருளாதாரம், ஜாதகப்பொருத்தம், படிப்பு, குடும்ப கவுரவம் இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?பா.சாந்தா, சென்னைமுதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப்பொருத்தம் பார்க்க வேண்டும். அடுத்து ஜாதகப்பொருத்தம் பாருங்கள். பொருளாதாரத்தை மட்டுமே பார்ப்பது அநாகரிகமானது. படிப்பை பொறுத்தவரை மனப்பொருத்தத்திலே அது சேர்ந்து விடும்.