உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன?ப.பாலகிருஷ்ணன், திட்டக்குடிகற்பு என்பது கணவன், மனைவிஇருவருக்கும் பொதுவானது. பெண்களிடம் மட்டும் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர். திருமணத்தில் இணையும் மணமகனும், மணமகளும் கற்பு நெறி தவறாமல் வாழ்வோம் என உறுதி மொழி ஏற்பதே அம்மி மிதிக்கும் சடங்காகும். அருந்ததி, வசிஷ்டர் இருவரும் கற்பு நெறி தவறாமல் வாழ்ந்தவர்கள். வானில் ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கும் அருந்ததியை வணங்கி ஆசி பெறுவதற்காகவும் இது செய்யப்படுகிறது.எனக்கு இறைபக்தி உண்டு. ஆனால், கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழவில்லையே?கே.ராகவி, வந்தவாசிஅசட்டை அல்லது வீட்டிலுள்ள மற்றவர்கள் உங்களைத் தடுக்க வேண்டும் என்பது தான் காரணமாக இருக்கும். இது இரண்டும் இல்லாதபட்சத்தில், உள்ளூரில் இருக்கும் கோயிலில் போய் சுவாமியை வணங்கி விட்டு வர வேண்டியது தானே! யார் உங்களைத் தடுக்கப் போகிறார்கள்!** பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?சி. கார்த்திகேயன், சாத்தூர் சுமங்கலிப் பெண்கள் என்றால் பொட்டு வைத்து பூச்சூடி இருந்தால் தான் நல்லது. வீட்டின் லட்சுமி கடாட்சத்திற்கும் இதுவே அடிப்படை. வகிடு எடுத்து ஜடை பின்னி, உச்சித்திலகம் வைத்து பூச்சூடிக் கொள்ள வேண்டிய தலையை மொட்டை அடித்துக் கொள்வது கூடாது. அது மட்டுமல்ல! நாகரிகம் என்ற பெயரில் ஆண்களைப் போல பெண்களும் அரைகுறையாக முடிவெட்டிக் கொண்டு அலைவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.* தாயை வணங்குவதால் புண்ணியம் கிடைக்குமா?எல்.கஸ்தூரி, அம்பத்தூர்உங்கள் கருத்துப்படி பார்த்தால் புண்ணியம் கிடைத்தால் தான், தாயையே வணங்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல! தாயை நீங்கள் வணங்கவும் வேண்டாம், காலில் விழவும் வேண்டாம். அவர்களுக்குரிய அன்றாடத் தேவையை முகமலர்ச்சியுடன் கவனித்தாலே போதும், புண்ணியம் கிடைத்து விடும். இது உங்கள் கணவரின் தாய்க்கும் பொருந்தும். மாமியாரையும் முகம் கோணாமல் தாயாய் கருதி கவனித்துக் கொள்ளவும்.தெய்வ வழிபாட்டில் 108 என்பதன் சிறப்பு என்ன?ஆ.சந்திரன், திண்டுக்கல்108 என்பது முக்கியமான எண்ணாகும். காரிய சித்தி, ஜெயம் அளிக்கும் நல்ல எண் இது. அதனுடைய விரிவே 1008. எடுத்த முயற்சியில் தடை அகன்று வெற்றி பெற வேண்டும் என்றிருப்பவர்கள் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து வழிபட நிச்சயம் வெற்றி கிடைக்கும்.