மனப்பாடப் பகுதி
UPDATED : டிச 06, 2019 | ADDED : டிச 06, 2019
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்எம்பொன் ஈசன் இறைவனென்று உள்குவார்க்குஅன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.பொருள்: துன்பம், துயரம் ஏதும் அணுகாமல் இன்பமாக வாழ விரும்பினால், இரவும் பகலும் சிவனை வணங்குங்கள். ''பொன்னிறம் கொண்ட ஈசனே! இறைவனே!' என உள்ளம் உருகுங்கள். திருவானைக்காவலில் வீற்றிருக்கும் தலைவனாகிய சிவபெருமானின் அன்பராக மாறுங்கள்.