உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்சசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சுவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்றுஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.பொருள்அம்பிகை நான்கு திருமுகங்களைக் கொண்டவள். நாராயணனின் தங்கை என்பதால் அவள் நாராயணி. தாமரை போன்ற மலர்க்கரங்களில் மலரம்புகளை ஏந்தி நிற்பாள். சம்புவான சிவபெருமானின் துணைவி என்பதால் சாம்பவி. இன்பங்களைத் தருவதால் சங்கரி. பசுமை நிறம் கொண்டதால் சியாமளா. வாயிலே நஞ்சு கொண்ட பாம்பினை ஆபரணமாக அணிந்தவள். திருமாலின் சகோதரியானதால் மாலினி. பன்றி முகம் கொண்ட வராகியும் அவளே. திரிசூலத்தை தாங்கி நிற்பதால் சூலினி. மதங்கமுனிவரின் மகளாக இருந்தபோது மாதங்கி என்று பலவிதமான திருநாமங்களைக் கொண்ட அம்பிகையின் திருவடிகளே நமக்குப் பாதுகாப்பு அளிக்கட்டும்.