உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

தாயே தந்தையென்றும் தாரமே கிளை மக்களென்றும்நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்வேயேய் பூம்பொழில் சூழ்விரையார் திரு வேங்கடவா!நாயேன் வந்தடைந்தேன்நல்கியாளென்னைக் கொண்டருளே!பொருள்: விண்ணுயர வளர்ந்த மூங்கில் காடுகளைக் கொண்டதும், மணக்கும் பூஞ்சோலைகளை உடையதுமான, திருவேங்கடத்தில் (திருப்பதி) அருளும் வெங்கடாஜலபதியே! தாய், தந்தை, மனைவி, உறவினர்கள், குழந்தைகள் என்று சம்சார நோயில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தேன். இப்போது, நீயே நிரந்தரமான உறவினன் என புரிந்து கொண்டேன். நாய் போன்ற நான், உன்னைக் காணும் பேராசையால், திருப்பதி வந்து உன்னைச் சரணடைந்தேன்.குறிப்பு: திருமங்கையாழ்வார் பாடல். இந்த பாடலை இரண்டு முறை பாடி, பெருமாளை வணங்கினால் நன்மை நடக்கும்.