உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனேவள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.(அருணகிரிநாதர் பாடிய பாடல்) பொருள்: வள்ளி மணாளனே! மயிலில் பவனி வரும் மாணிக்கமே! கோடிக்கணக்கில் முத்துக்கள் விளையும் கடல் சூழ்ந்த திருச்செந்துாரில் வீற்றிருப்பவனே! எரிகின்ற கொள்ளியில்,சிக்கிய எறும்பு போல பிறவி துன்பத்தால் மனம் வருந்துகிறேன். என் கவலையைப் போக்கியருள வேண்டும்.