மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 17, 2018 | ADDED : ஆக 17, 2018
தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால் வெம் தரணிமுதல்கோளை வன்தீவினைப் பேயோடு வென்று குலாவுவன் காண்வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி அப்பால்வேளை நல்கிப் பல் உலகோரும் வாழச் செய் மின்கொடியே.( திருமகள் அந்தாதியில் உள்ள பாடல்)பொருள்: ஒளி வீசும் கொடி போன்றவளே! உலக உயிர்களுக்கு நல்வாழ்வு தரும் லட்சுமியே! நெடியவனான திருமாலை வாள் போன்ற கண்களால் மயக்குபவளே! உன் திருவடிகளை என் தலை மேல் வைத்தால் கொடிய தீவினை என்னும் பேயை வென்று மகிழ்வுடன் வாழ்வேன்.