உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்தபடியே மறையின் பரிமளமே பனிமால் இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மேஅடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.(அபிராமிபட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடல்)பொருள்: கொடி போன்றவளே! இளமை மிக்கவளே! பூங்கொம்பே! மணம் நிறைந்த பரிமளமே! உரிய காலத்திற்கு முன்பே பக்குவமாக கனியச் செய்தவளே! வேதநாயகியே! பனி சூழ்ந்த இமயமலையில் வாழும் பெண் யானையே! பிரம்மன் உள்ளிட்ட தேவர்களைப் பெற்ற அன்னையே! என்னை பிறவிப்பிணியில் இருந்து காத்தருள்வாயாக.