உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து கண்ணீர் ததும்பபக்கம் நோக்கி நின்றலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே!பொருள்: சக்கராயுதம் கொண்ட கண்ணனே! பெருமை மிக்கவனே! என்று கண்ணீர் ததும்பி நிற்கிறேன். திசை எங்கும் உன் வரவுக்காக காத்திருக்கிறேன். பாவியாகிய எனக்கு உன் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. நிறைவான ஞானம் அருளும் மூர்த்தியே! வேதங்களுக்கு பொருள் தரும் விளக்கு போன்றவனே! ஞானக் கண்களால் உன்னை ஒருநாள் தரிசித்து மகிழ்வேன்.