மனப்பாடப்பகுதி
UPDATED : டிச 20, 2019 | ADDED : டிச 20, 2019
துன்பே தரும் சூன்யம் வம்பு பகைபுன்பேய் பல பூதகணங்கள் எல்லாம்நின்பேர் சொல நீறு படும் படுமேஅன்பே புரி அஞ்சனை அம்சுதனே.(அனுமார் அனுபூதி பாடல்)பொருள்: ஆஞ்சநேயரே! துன்பம் தரும் சண்டை சச்சரவு, பூதம், பேய் போன்றவற்றால் ஏற்படும் பயம் ஆகியவை உமது பெயர் சொன்னால் சாம்பலாகி விடும். அஞ்சனையின் அழகான புதல்வனே! உமது அன்பை என் மீது பொழிவீராக.