உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணமும்அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்பயனென்று கொண்டவர் பாவையராடவும் பாடவும் பொன்சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.பொருள்: மூன்று கண்களை உடைய சிவனும், வேதங்களும், திருமாலும், பிரம்மாவும் போற்றி வணங்குகின்ற அபிராமி அன்னையே! உன் பாத கமலங்களை வணங்குவதே பிறவிப்பயன் என்று வாழ்பவர்கள் மேலானவர்கள். அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியாக வாழும் புண்ணிய உலகில் தங்குவர்.