உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்கஇழவுற்று நின்ற நெஞ்சே! இரங்கேல் உனக்கு என் குறையே.பொருள்: யாருக்கும் நிகரில்லாத அழகு மிக்கவளே! மேலான வேதங்களால் போற்றப்படுபவளே! தாமரை போன்ற சிவந்த திருப்பாதம் கொண்டவளே! குளிர்ச்சியான பிறையை தலையில் சூடியவளே! இளமையானவளே! அபிராமித்தாயே நமக்கு துணையிருக்கும் போது வருத்தப்படத் தேவையில்லை.