உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

பொன்னார் மேனி மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடை மேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமேஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!பொருள் : பொன்னைப் போல் ஒளிவீசும் அழகுடையவனே! புலித்தோல் ஆடையை இடையில் அணிந்திருப்பவனே! சிவந்த சடையில் பிரகாசம் பொருந்திய கொன்றை மலர்களைச் சூடியவனே! பழமையிலும் பழமையானவனே! ஒப்பற்ற எங்கள் தவமணியே! திருமழபாடியில் கோயில் கொண்டிருப்பவனே! எங்களுக்கு தாயாக விளங்குபவனே! உன்னை விட்டு வேறு யாரை நான் சிந்திப்பேன்?