உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவேபொருள் அபிராமி அன்னை பேரழகானவள். தந்தையான சிவனின் துணைவி. பந்த பாசங்களை போக்குபவள். சிவந்த திருமேனி கொண்டவள். மகிஷாசுரனின் தலை மீது நின்று வதம் செய்தவள். நீலி என்னும் கன்னியாகத் திகழ்பவள். பிரம்ம கபாலத்தை ஏந்தியவள். அவளது மலர் பாதங்களை எப்போதும் சிந்திக்கிறேன்.