மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 12, 2020 | ADDED : ஆக 12, 2020
அருமறை முதல்வனை ஆழிமாயனைக் கருமுகில் வண்ணனை கமலக் கண்ணனைத்திருமகள் தலைவனை தேவ தேவனைஇருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்அரிய வேதங்களால் போற்றப்படும் முதல்வனே! கடலில் துயில்பவனே! மாயையில் வல்லவனே! மேக நிறத்தவனே! தாமரை போல சிவந்த கண்களைக் கொண்டவனே! மகாலட்சுமியின் மணாளனே! தேவர்களின் தலைவனே! உன் தாமரைப் பாதங்களைச் சரணடைகிறோம்.