உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே. பொருள்: வஞ்சனை மிக்க கல்நெஞ்சம் உடையவர்களால் அடைய முடியாதவரே! நல்லவர்களின் உள்ளத்தில் குடியிருப்பவரே! காளை வாகனரே! ஞானமே வடிவானவரே! பாம்புகள் படமாடும் மேனியரே! நீண்ட ஜடையும், கையில் நெருப்பும் ஏந்தி நள்ளிரவில் நடனமாடும் பெருமானே! உம்மை என் மனதில் எப்போதும் தியானிக்கிறேன்.