மனப்பாடப்பகுதி!
UPDATED : ஏப் 21, 2014 | ADDED : ஏப் 21, 2014
கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கரைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ! பொருள்: வண்டே! நீ சிவனிடம் செல். அவனிடம், 'ஐம்புலன்களுக்கும் அகப்படாமல், எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நீலகண்டனே! கருணைக்கடலான உன் திருவடிகளை, நான் (மாணிக்கவாசகர்) சரணம் என்று பற்றிக் கொண்டு விட்டதாகச் சொல். உன்னைச் சரணடைந்த அவருக்கு பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையும் போக்கி விடு' என்று உன் ரீங்கார மொழியால் சொல்'.