உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

எழும்போதும் வேலு மயிலுமென்பேன் எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலு மயிலுமென்பேன் தொழுதே உருகி அழும்போதும் வேலு மயிலுமென்பேன் அடியேன் உடலும் விழும் போதும் வேலு மயிலுமென்பேன் செந்தில் வேலவனே. பொருள்: திருச்செந்தூரில் அருள்புரியும் வேல் முருகா! காலையில் விழிக்கும் போதும், மகிழ்வுடன் வணங்கும் போதும், பக்தியால் கண்ணீர் சிந்தும் போதும், என் உடல் கீழே சாயும் போதும் உனக்குரிய 'வேலுமயிலும்' என்னும் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பேன்.