மனப்பாடப்பகுதி!
UPDATED : ஆக 22, 2014 | ADDED : ஆக 22, 2014
அருமறை யவனை ஆணொடு பெண்ணனைக்கருவிடம் மிக உண்ட வெங் கண்டனைப் புரி வெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர் உருகி நைபவர் உள்ளம் குளிருமே.பொருள்: வேதத்தால் துதிக்கப்படுபவனே! அர்த்தநாரியாக உமையவளை இடப்பாகத்தில் பெற்றவனே! ஆலகால விஷத்தைக் குடித்த நீலகண்டனே! வெண்மையான முப்புரி நூலினை அணிந்தவனே! வைத்தீஸ்வரன்கோவிலில் வாழும் வைத்தியநாதனே! மனமுருகி வழிபடுவோரின் உள்ளம் குளிர அருள்புரியும் சிவனே! உன்னை வணங்குகிறேன்.