மனப்பாடப்பகுதி!
UPDATED : ஆக 26, 2014 | ADDED : ஆக 26, 2014
ஏகன் நீ அனேகன்நீ இருளும்நீ ஒளியும்நீபோகிநீ யோகிநீ புலவர் எல்லாரும்நீசாகரம் ஏழும்நீ தடவரைக்குலமும்நீமாகநின் அடிமலர் மருவவல்லார் எவர்?பொருள்: விநாயகப்பெருமானே! ஒப்பில்லாத தனித்தெய்வமே! உலகிலுள்ள மற்றைய தெய்வங்களுமாக இருப்பவரே! ஒளியும், இருளுமாக உள்ளவரே! இல்லறம், துறவறத்தின் தலைவரே! அறிஞர்களின் அறிவாகத் திகழ்பவரே! ஏழுகடல்களும், பெரிய மலைகளுமாக விளங்குபவரே! உமது திருவடியின் பெருமையை சொல்ல வல்லவர் யாருமில்லை.