மனப்பாடப்பகுதி!
UPDATED : செப் 16, 2014 | ADDED : செப் 16, 2014
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்- வேங்கடமே தானவரை வீழத் தன்னாழிப்படை தொட்டு வானவரைக் காப்பான் மலை பொருள்: விண்ணுலக தேவர்கள் வணங்கும் மலை திருவேங்கடம் (திருப்பதி). உண்மையான பக்தியால் வழிபடும் அடியார்களின் தீவினைகளைத் தீர்க்கும் மலையும் அதுவே. அசுரர்களை அழிக்கவும், தேவர்களைக் காக்கவும் திருமால் சக்ராயுதம் தாங்கி நிற்கும் கோயிலும் திருவேங்கடமே.