உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்றமூவரும் தானவராகி உள்ளோரும் முனிவரரும்யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்தபூவரு மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே.பொருள்: வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பவளே! உன் அருளால் வானுலக தேவர்கள், தெய்வத்தன்மை பொருந்திய சிவன், நால்வேதம் ஓதும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரர், முனிவர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் ஞானத்தை அடைகின்றனர். எமக்கும் ஞானத்தை அருள்வாயாக.