உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

புங்கவர் வழுத்தும் வேற்கைப் புனிதனே! அயிராணிக்கு மங்கல நாணை யீந்த வரதனே! என்றும் நின்றாள் பங்கயம் போற்றும் நாயேன் பதியினை யளித்துப் பொன்னாண் இங்கெனக்கு அளிப்பாய்! தண்டம் ஏந்திய இளையதேவே!வேலனே போற்றி! ஞான விகிர்தனே போற்றி! ஞானக் கோலனே போற்றி! தெய்வக் குமரனே போற்றி! ஈசன் பாலனே போற்றி! ஞான பண்டித போற்றி! ஞான சீலனே போற்றி! தேவ தேவனே போற்றி போற்றி!!பொருள்: தேவர்கள் போற்றும் வேலினைக் கையில் தாங்கிய புனிதனே! இந்திராணிக்கு மாங்கல்யத்தை அருளிய வரதனே! நான் உன் திருவடித் தாமரைகளை வணங்கும் நாயைப் போன்றவள். என் கணவனுக்கு உயிர்தந்து மாங்கல்யத்தை இப்போதே அருள் செய்ய வேண்டும். தண்டாயுதத்தை ஏந்தியவனே! வேலவனே! ஞானத்தின் இருப்பிடமே! ஞான வடிவே! குமரக்கடவுளே! சிவனார் பாலகனே! ஞான பண்டிதனே! ஞானசீலனே! தேவாதிதேவனே! உன்னைப் போற்றுகிறேன்.