மனப்பாடப்பகுதி!
UPDATED : நவ 19, 2014 | ADDED : நவ 19, 2014
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. பொருள்: சிவபெருமானே! நீயே விண்ணாகவும், மண்ணாகவும், காற்றாகவும், ஒளியாகவும், உடலா கவும், உயிராகவும் இருக்கிறாய். உண்மையாகவும், இல்லாதவனாகவும் விளங்குகிறாய். நீயே உலகத்திற்கு தலைவனாக இருக்கிறாய். அது மட்டுமில்லாமல் உலக உயிர்கள் அனைத்திற்கும் நான், எனது என்ற அகப்பற்றையும் புறப்பற்றையும் தந்து கூத்தாட்டுபவனாகவும் இருக்கிறாய். அப்படிப்பட்ட அருமை பெருமைகளை உடைய உன்னை என்ன சொல்லி வாழ்த்துவதென்றே எனக்கு புரியவில்லை.