உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச் சிவாயவே.பொருள்: வேத முதல்வரே! ஜோதி வடிவானவரே! வானம் போல் உயர்ந்தவரே! பொன் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! சிவபெருமானே! என்னைக் கல்லோடு கட்டிக் கடலில் தூக்கிப் போட்டாலும் கூட, 'நமசிவாய' என்ற மந்திரம் காப்பாற்றும். குறிப்பு: திருநாவுக்கரசர் தேவாரத்தில் இப்பாடல் உள்ளது.