உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

அல்லல் இல்லை அருவினை தானில்லைமல்கு வெண்பிறை சூடும் மணாளனார்செல்வனார் திருவேட்களம் கைதொழவல்லராகில் வழியது காண்மினே.பொருள்: வெண்மையான பிறை அணிந்திருப்பவரே! உமையவள் மணாளரே! செல்வச் செழிப்பு மிக்கவரே! திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வாழ்பவரே! துன்பம் இல்லாத வாழ்வு தருபவரே! பாவங்களைத் தீர்ப்பவரே! உம்மைத் தரிசித்தால் நல்வழி கிடைப்பது கண்கூடு.குறிப்பு: சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் திருவேட்களம் சிவன் பற்றி திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்.